"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின்" நோக்கு எனும் அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய மலர்ந்த 2021 ஆம் ஆண்டின் முதலாம் நாளாகிய இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களின் தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.
இதன் போது பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், பிரதேச செயலகத்தின் அனைத்து ஊழியர்களும் அரச சேவை உறுதியுரை/ சத்தியப் பிரமாணம் மேற்கொண்டனர்.
COVID 19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் மற்றும் எமது சமூகத்திற்கும் உள்ள பொறுப்புகளை வலியுறுத்தும் வகையில் பிரதேச செயலாளரினால் உரை நிகழ்த்தப்பட்டது. மேலும் சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள பிரஜைகளை, பண்பாடான, ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் நேர்மையுடன், தாமதமின்றி, அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்குமாறும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த 2020 ஆம் ஆண்டில் சிறப்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை (COMMENDATIONS AND CENSURES) பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது விசேட அம்சமாகும்.
கஜூ உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் 15.12.2020
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஜூ உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான செயற்றிட்டம் 2020.12.15 அன்று இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.நிகாரா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.MAH.சிஹானா, வியாபார மற்றும் சிறுதொழில் ஊக்குவிப்பு இணைப்பாளர் கிழக்கு மாகாணம் (NEDA) திரு.AD.லத்தீப் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்(NEDA) ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின் போது ரூபாய் 490,500.00 பெறுமதியான தாச்சிகள் உற்பத்தியாளர்களுக்கு பிரதேச செயலாளர் திருமதி.நிகாரா மௌஜூத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
ஆயிரம் பனை விதைகள் நடுகை விழா
ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த 1000 பனை விதைகள் நடும் விழா ஐயங்கேணி கிராம சேவகர் பிரிவில் 21.10.2020 அன்று நடைபெற்றது.
ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற இப்பனை விதை நடும் விழாவில் ஏறாவூர் நகர பிரதேச செயலக உதவித்திட்டமிட்டல் பணிப்பாளர், மாவட்ட பனை அபிவிருத்தி அதிகார சபை முகாமையாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம சேவையாளர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதேச செயலாளர் முதலாவது பனை விதையினை நட்டு ஆரம்பித்துவைத்தார்.
மேலும் எதிர்காலத்தில் பனை அபிவிருத்திப் பயிற்சிக் கூடம் ஒன்றினை ஐயங்கேணி கிராம சேவகர் பிரிவில் அமைப்பது பற்றி இதன்போது பரிசீலனை செய்யப்பட்டது.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் அதிகாரப்பரப்பிற்குட்பட்ட பரப்பில் வாழும் கைத்தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் 264 பயனாளிகளுக்கு கைத்தொழில் உபகரணங்கள் 21.10.2020 அன்று வழங்கிவைக்கப்பட்டன.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு மேற்கொள்ளும் நன்வெமு ஸ்ரீலங்கா தேசிய தொழில் முயற்சி வேலைத்திட்டத்தின் கீழ் 5,555,447.00 பெறுமதியான கைத்தொழில் உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. MAH.சிஹானா, நிர்வாக உத்தியோகத்தர் திரு. SA. றஹீம் ஆகியோர் பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிவைத்தனர்.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சோளம் அறுவடை விழா ஐயங்கேணி கிராம சேவகர் பிரிவில் 09.10.2020 அன்று இடம்பெற்றது.
ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவில் உப உணவு உற்பத்திகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தினை ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோள பயிர்ச் செய்கையில் 7000 சோளம் குலைகள் அறுவடை செய்யப்பட்டன.
பிரதேச செயலாளர் திருமதி. நிகாரா மௌஜுத் அவரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிராம சேவையாளர், காணி பண்பாட்டு உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும், மானிய அடிப்படையில் உள்ளீடுகளை வழங்கவுள்ளதாகவும், விவசாய உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதன்போது பிரதேச செயலாளர் விவசாயிகளிடம் நம்பிக்கை வெளியிட்டார்
Page 1 of 2