- Details
- Parent Category: Top Menu
இந்திய நிவாரணப் பொருட்கள் கையளித்தல்.
இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை
கருத்திக்கொண்டு இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணப் பொருட்களில்
ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் 03.06.2022 திகதி மட்டக்களப்பை வந்தடைந்தன.
கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் எடுத்துவரப்பட்ட நிவாரணப் பொருட்களை
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
குறித்த நிவாரணப்பொருட்களில் ஏறாவூர் நகர பிரதேச மக்களுக்கான பொருட்கள் நேற்று
(2022.06.05) மாலை, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்த் மற்றும்
உதவி மாவட்ட செயலாளர் திரு.ஆறுமுகம் நவேஸ்வரன் ஆகியோரினால்
ஏறாவூர் நகர் பிரதேச செயலாளரிடம் (MRS. நிஹாரா மவ்ஜுட் ) கையளிக்கப்பட்டன.
இன்று (06.06.2022)தொடக்கம் நிவாரணப் பொருட்கள் குறைந்த வருமானம்
பெறும் குடும்பங்களுக்கு பகிர்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




- Details
- Parent Category: Top Menu
உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தல்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை கொண்ட
குறைந்த வருமானமுள்ள 75 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள்
S.F.R.D நிறுவனத்தினால் 31.05.2022 ம் திகதி ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்கு
முன்பாக உள்ள வாவிக்கரை பூங்காவினுள் வைத்து வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சமூக சேவைத் திணைக்கள உத்தியோகத்தர் - S.A.C.Najimudeen (SSO),
சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் -M.S.Rameeza.(DO),
மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் - U.L.F.Rihana(WDFA) பங்குபற்றியதோடு
S.F.R.D நிறுவனம் சார்பாக பிராந்திய ஒருங்கிணைப்பாளர் Izzath Irfani மற்றும்
A.Rawff ஆகியோரின் நெறிப்படுத்தலோடு மேற்படி நிகழ்வு நடைபெற்றது.







- Details
- Parent Category: Top Menu
அங்கவீனமுற்ற நபர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி- 2022
அங்கவீனமுற்ற நபர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி மாவட்ட மட்ட ரீதியில்
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் 27/05/2022 ம் திகதி இடம்பெற்றது.
இதில் எமது ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவின் கீழ் 05 போட்டியாளர்கள் பங்கு பற்றியதோடு
வெற்றியாளர்களின் விபரங்கள் பின்வருமாறு.
1. சுலைமாலெப்பை ஐவ்பர் - 100M ஓட்டம் - 3 ஆம் இடம்.(சிரேஷ்ட பிரிவு.)
2.கம்சா முஹமட் ஹலீம். 100M ஓட்டம் 2ஆம் இடம்.(கனிஷ்ட பிரிவு)
3.முஹமட் அபுசாலி றம்ஸித் அலி.100M ஓட்டம் 3 ஆம் இடம்.(கனிஷ்ட பிரிவு)
4.முஹமட் அபுசாலி றம்சித் அலி தட்டு வீசுதல் 2 ஆம் இடம் (கனிஷ்ட பிரிவு)






- Details
- Parent Category: Top Menu
ஏறாவூர் நகர மத்தியஸ்த சபைக் குழாத்திற்கான புதிய மத்தியஸ்தர்கள் நியமனம்
219ம் இலக்க ஏறாவூர் நகர மத்தியஸ்த சபைகள் குழாத்திற்காக 33 மத்தியஸ்தர்கள் (26 ஆண்கள், 07 பெண்கள்)
தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சை , 5 நாள் பயிற்சி
மற்றும் பரீட்சை என்பவற்றில்பெற்றுக்கொண்ட புள்ளிகள் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மத்தியஸ்தர்களுக்கான
நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 18.05.2022ம் திகதி பி.ப 3.00 மணிக்கு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர்
திருமதி. நிஹாறா மௌஜுத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான
திரு. கணபதிபிள்ளை கருணாகரன் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளாக ஏறாவூர் நகர பிரதேச செயலக உதவித்திட்டமிடல்
பணிப்பாளர் திருமதி. M.A.H. சிஹானா, முன்னாள் மத்தியஸ்த சபை தவிசாளர் M.M. இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீதி அமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களான மத்தியஸ்த பயிற்றுனர்
M.I.M ஆஸாத், மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோத்தர்களான திருமதி. சாந்த தர்மினி விமல சந்த்துரு மற்றும் M.A.M அஜுன்
ஆகியோரின் நெறிப்படுத்தலோடு மேற்படி நிகழ்வு நடைபெற்றதுடன்,
ஏறாவூர் நகர மத்தியஸ்த சபைகள் குழாத்தின் புதிய தவிசாளராகவும் முதலாவது பெண் தவிசாளராகவும்
திருமதி பஹியா அப்துல் காதர் நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.





















