2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு  ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

 

ஏறாவூர் பிரதேச செயலகத்தின்  2025.01.01 இன் #கிளீன்_சிறீலங்கா (Clean srilanka) தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தின்  கடமைகள்  ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற  கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய விழா உடன் இலத்திரனியல் அலைவரிசை மூலம் நேரடியாக ஒலி/ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சகல நடவடிக்கைகளிலும், அனைத்து பிரசைகள் உயர் சமூக அந்தஸ்தை அடைவதற்கு உறுதுணையாக அமைகின்ற, ஒற்றுமை, பொறுப்புக்கூறல், சிக்கனம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய விடயங்களை முன்னுதாரணமாக கடைப்பிடிப்பதற்கும், அத்தர நியமங்களை பாதுகாத்த வண்ணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அரச ஊழியர்கள் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலை திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள்  நிகழ்வில் சமர்ப்பிக்கபட்டது.

 

 

 

 

மோட்டார் வாகன அனுமதி சீட்டு விநியோகம் தற்காலிக இடைநிறுத்தம் தொடர்பாக.


கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தேர்தல் கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் செல்வதனால் 13,14 ஆம் திகதிகளில் (புதன்கிழமை, வியாழக்கிழமை)மோட்டார் போக்குவரத்து பிரிவின் மோட்டார் வாகன அனுமதிச்சீட்டு வழங்கும் சேவைகள் இடம்பெறாது என்பதனை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

மீண்டும் 18/11/2024 ஆம் திகதியே இச்சேவைகள்  இடம்பெறும் என்பதனால் இத்தினங்களில் அனுமதிப்பத்திரம் பெற வேண்டியவர்கள் முன்கூட்டியே (நாளைய தினம் 12/11/2024) பெற்றுக் கொள்ளுமாறு  கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்:

பிரதேச செயலாளர்,

பிரதேச செயலகம்,

ஏறாவூர் நகரம்.

11/11/2024

 

 

சனத்தொகை கணக்கெடுப்பு 2024
கணக்கெடுப்பாளர்களை ஆட்சேர்பு செய்தல்.
 
மேற்படி கடமைக்காக கணக்கெடுப்பாளர்களாக கடமையாற்ற விருப்பமான அரச உத்தியோகத்தர்கள் மற்றும் க.பொ. ( உ/த) அல்லது அதற்கு மேல் கல்வித்தகைமையும் ஸ்மார்ட் தொலைபேசி வசதி மற்றும் பயன்படுத்தும் திறனுமுடைய அரச உத்தியோகம் அல்லாத தனி நபர்களிடமிருந்தும் தற்பொழுது Online பதிவின் மூலமான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.
தெரிவு செய்யப்படவுள்ள கணக்கெடுப்பாளர்களிடம் 3அல்லது 4 தொகைமதிப்புக் கண்டங்கள் வழங்கப்பட்டு தகவல்கள் சேகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதற்கான தகுதியானவர்களை மேலே உள்ள Online Link ஊடாக விண்ணப்பிக்க செய்வதுடன் எமது அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற விருப்பமான உத்தியோகத்தர்களையும் இதற்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலதிகத் தகவல்களுக்கு பிரததேச தொகைமதிப்பு உத்தியோகத்தரை (0772636559) தொடர்பு கொள்ளவும்
பிரதேச செயலாளர்.
01.06.2024

 

 

இளைஞர் அபிவிருத்திக் குழு  2023 - ஏறாவூர் நகர்

 

*இலங்கையில் இளைஞர் அபிவிருத்திக்காக ஒன்றினைந்த நோக்கில் பிரதேச இளைஞர் அபிவிருத்திக் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.*

இளைஞர் அபிவிருத்திக்காக நேரடியாக தொடர்புபடும் மற்றும் பொறுப்புக்களை வகிக்கும் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும்

பிரதேச மட்டத்திலான அரச நிறுவனங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும்

இளைஞர் அபிவிருத்தி துறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் கொண்டு

பிரதேச இளைஞர் அபிவிருத்திக் குழு இன்று (07.07.2023) ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

 

பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார மருத்துவ

அதிகாரி திருமதி.  ஸாபிரா வஸீம் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.MHA.ஸிஹானா, பொலிஸ் நிலைய பதில் நிலையப்

பொறுப்பதிகாரி திரு. சன்ஜீவ குமாற, மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்வி பணிப்பாளர் ஜனாப். AM.முபாஸ்தீன், பிரதேச செயலக

வெளிக்கள உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக சம்மேளன தலைவர் உட்பட உறுப்பினர்கள், இளைஞர் கழக சம்மேளன ஆலோசகர்

MHM. பைஸல் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும்  கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வில் இளைஞர்களது எதிர்வரும் ஐந்து ஆண்டுத் திட்டம் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டதுடன் எதிர்வரும் இரண்டு

வாரங்களுக்குள் பிரதேச இளைஞர் அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

  

 

 

 

 

தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டம் - 2023

 

தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரத்தின்

இரண்டாம் நாளான (31-05-2023) திகதி வளி மாசடைதலை தடுத்தல் என்ற

தொனிப்பொருளின் கீழ் மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

ஏறாவூர்-3A கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.

 

 

 

 

News & Events

31
Jul2026
நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

    "நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா"...

15
Jun2026
பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

      பிரதேச மட்ட விளையாட்டு விழா...

15
Jun2026
ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

      ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட்...

« »
Scroll To Top