மோட்டார் வாகன அனுமதி சீட்டு விநியோகம் தற்காலிக இடைநிறுத்தம் தொடர்பாக.
கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தேர்தல் கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் செல்வதனால் 13,14 ஆம் திகதிகளில் (புதன்கிழமை, வியாழக்கிழமை)மோட்டார் போக்குவரத்து பிரிவின் மோட்டார் வாகன அனுமதிச்சீட்டு வழங்கும் சேவைகள் இடம்பெறாது என்பதனை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
மீண்டும் 18/11/2024 ஆம் திகதியே இச்சேவைகள் இடம்பெறும் என்பதனால் இத்தினங்களில் அனுமதிப்பத்திரம் பெற வேண்டியவர்கள் முன்கூட்டியே (நாளைய தினம் 12/11/2024) பெற்றுக் கொள்ளுமாறு கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
ஏறாவூர் நகரம்.
11/11/2024














