இளைஞர் அபிவிருத்திக் குழு 2023 - ஏறாவூர் நகர்
*இலங்கையில் இளைஞர் அபிவிருத்திக்காக ஒன்றினைந்த நோக்கில் பிரதேச இளைஞர் அபிவிருத்திக் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.*
இளைஞர் அபிவிருத்திக்காக நேரடியாக தொடர்புபடும் மற்றும் பொறுப்புக்களை வகிக்கும் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும்
பிரதேச மட்டத்திலான அரச நிறுவனங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும்
இளைஞர் அபிவிருத்தி துறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் கொண்டு
பிரதேச இளைஞர் அபிவிருத்திக் குழு இன்று (07.07.2023) ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார மருத்துவ
அதிகாரி திருமதி. ஸாபிரா வஸீம் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.MHA.ஸிஹானா, பொலிஸ் நிலைய பதில் நிலையப்
பொறுப்பதிகாரி திரு. சன்ஜீவ குமாற, மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்வி பணிப்பாளர் ஜனாப். AM.முபாஸ்தீன், பிரதேச செயலக
வெளிக்கள உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக சம்மேளன தலைவர் உட்பட உறுப்பினர்கள், இளைஞர் கழக சம்மேளன ஆலோசகர்
MHM. பைஸல் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இளைஞர்களது எதிர்வரும் ஐந்து ஆண்டுத் திட்டம் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டதுடன் எதிர்வரும் இரண்டு
வாரங்களுக்குள் பிரதேச இளைஞர் அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


















