பிரதேச இளைஞர் கழக சம்மேளன புனரமைப்புக் கூட்டம் - 2022
ஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான பொதுச்சபைக் கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும், இப்தார் நிகழ்வும் பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது தேசிய இளைஞா் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி. ஜேசுதாசன் கலாராணி, பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் AW.இர்சாத் அலி, பிரதேச கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி MI. மஹ்பூழ் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.


















