ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சோளம் அறுவடை விழா ஐயங்கேணி கிராம சேவகர் பிரிவில் 09.10.2020 அன்று இடம்பெற்றது.
ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவில் உப உணவு உற்பத்திகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தினை ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோள பயிர்ச் செய்கையில் 7000 சோளம் குலைகள் அறுவடை செய்யப்பட்டன.
பிரதேச செயலாளர் திருமதி. நிகாரா மௌஜுத் அவரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிராம சேவையாளர், காணி பண்பாட்டு உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும், மானிய அடிப்படையில் உள்ளீடுகளை வழங்கவுள்ளதாகவும், விவசாய உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதன்போது பிரதேச செயலாளர் விவசாயிகளிடம் நம்பிக்கை வெளியிட்டார்