2019ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல்
அரச நிர்வாக சுற்றறிக்கை 28/2018 இற்கு அமைவாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் ஜனாப்.V.யூஸுஃப் அவர்களின் தலைமயில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
01.01.2019ம் திகதி காலை 9.00மணிக்கு தேசியக் கொடி பிரதேச செயலாளரால் ஏற்றப்பட்டு தேசியக்கீதம் இசைக்கப்பட்தோடு 2நிமிட மௌன அஞ்சலியைத் தொடர்ந்து சகல உத்தியோகத்தர்களாலும் சேவை உறுதி மொழி பிரதேச செயலாளர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து பிரதேச செயலாளரால் அரச கொள்கை தொடர்பாக சிறப்பு சொற்பொழிவு வழங்கப்பட்டதன் பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சம்பிரதாய நடைமுறைகளின் படி இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி என்பன வழங்கி பரஸ்பர வாழ்த்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டு புதுவருட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.